தேவாதி தேவன் இராஜாதி இராஜன்

வாழ்க வாழ்கவே

கர்த்தாதி கர்த்தர் மன்னாதி மன்னன்

வாழ்க வாழ்கவே

 

மகிமை உமக்குத்தான்

மாட்சிமை உமக்குத்தான்

மகிமை உமக்குத்தான்

மாட்சிமை அதுவும் உம்க்குத்தான்

 

1.

திசை தெரியாமல் ஓடி

அலைந்தேன் தேடி வந்தீரே

சிலுவையில் தொங்கி இரத்தம் சிந்தி

இரட்சித்து அணைத்திரே     –  மகிமை

 

2.

எத்தனை நன்மை எனக்குச் செய்தீர்

எப்படி நன்றி சொல்வேன்

வாழ்நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்து

உம் பணி செய்திடுவேன்      –  மகிமை

 

3.

சோதனை நேரம் வேதனை வேளை

துதிக்க வைத்தீரே

எதிராய் பேசும் இதயங்களை

நேசிக்க வைத்தீரே     –  மகிமை

 

4.

வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்

அதிகமாய் செய்பவரே

மீண்டும் மீண்டும் ஆறுதல் தந்து

அணைத்து மகிழ்பவரே   –  மகிமை

 

5.

உளையான சேற்றில் வாழ்ந்த‌

என்னை தூக்கி எடுத்தீரே

கன்மலையின் மேல்நிறுத்தி என்னை

பாட வைத்தீரே       –  மகிமை



thevathi thevan irajaாthi irajan

vazka vazkave

karththathi karthdhar mannathi mannan

vazka vazkave

 

makimai umakkuththan

madsimai umakkuththan

makimai umakkuththan

madsimai athuvum umkkuththan

 

1.

thisai theriyamal oodi

alainththen thedi vanththire

siluvaiyil thongki irathdham sinththi

iradsiththu anaiththire     –  makimai

 

2.

ethdhanai nanmai enakkus seythir

ebpadi nanri solven

vaz nalellam umakkay vaznththu

um pani seythiduven      –  makimai

 

3.

sodhanai neram vedhanai velai

thuthikka vaiththire

ethiray besum idhayangkalai

nesikka vaiththire     –  makimai

 

4.

venduvadharkum ninaibpadharkum

athikamay seypavare

mindum mindum aarudhal dhanththu

anaiththu makizpavare   –  makimai

 

5.

ulaiyana serril vaznthdha‌

ennai thukki eduththire

kanmalaiyin mel niruththi ennai

bata vaiththire       –  makimai